அவிநாசி:விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி இந்து அமைப்புகள் சார்பில், அவிநாசி பகுதி, சேவூர், திருமுருகன்பூண்டி, கருவலூர், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று 2ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கைகாட்டிப்புதூர் மகா மாரியம்மன் கோவிலில், ஐந்தரை அடி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமா்சையாக கொண்டாடப்பட்டது.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி பகுதியில் வைக்கப்பபட்டுள்ள விநாயகர் சிலைகள், நாளை 4ல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பபட்டு, விசர்ஜனம் செய்யப் படுகிறது.