ஒருமுறை சிவன் மீது கோபம் கொண்டாள் பார்வதி. அதை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்தாள். மனைவியின் பொய்க் கோபத்தை (ஊடல்) உணர்ந்த சிவனும், அவளின் காலில் விழுந்து தன்னை ஏற்கும்படி வேண்டினார். அப்போது அங்கு ஓடி வந்த பாலகணபதி, தந்தை சிவனின் தலையில் இருந்த மூன்றாம் பிறையை, துதிக்கையால் இழுக்க முயன்றார். கணபதியின் விளையாட்டைக் கண்டு ரசித்த சிவன் மகனை அணைக்க முயன்றார். பார்வதியும் அவ்வாறே செய்ய முயன்றாள். சிவன், பார்வதி இருவரது கைகளும் ஒன்றோடொன்று மோதின. பாலகணபதியின் பிள்ளை விளையாட்டால் சிவ, பார்வதியின் ஊடல் மறைந்து ஒன்றாயினர்.