விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில், ’விதை விநாயகர்’ விற் பனையை தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி துவக்கி வைத்தார்.தமிழக தோட்டக் கலைத்துறை சார்பில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான களிமண்ணால் ஆன ’விதை விநாயகர்’ விற்பனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருத்தாசலம், காட்டுக்கூடலுார் ரோட்டிலுள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நேற்று முன்தினம் செப்., 1ல், நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ராஜாமணி ’விதை விநாயகர்’ விற்பனையை துவக்கி வைத்தார்.சென்னை தோட்டக்கலை துறை சார்பில், 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், விருத்தாசலம் அரசு பண்ணையில் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலைத் துறை அலுவலக தொழில்நுட்ப அலுவலர் அலெக்ஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.