பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
கடலுார்: கடலுாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீராம் ஸ்வீட் கடையில், 72 கிலோ எடை கொண்ட லட்டு தயார் செய்யப்பட்டு, நெய்வேத்தியம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்பட்டது. கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் ஸ்வீட் கடை வைத்துள்ளவர் ரமேஷ், 58; இவர், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று 2ம் தேதி 72 கிலோ லட்டு தயாரித்து, பிள்ளை யாருக்கு நெய்வேத்தியம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு பிரசாதமாய் வழங்கினார்.இது குறித்து ரமேஷ் கூறுகையில் ’15 பேர் கொண்ட குழுவினர் மூன்று நாட்களாக லட்டை உருவாக் கினர். 30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை ,கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டது’ என்றார்.