விருத்தாசலம்: பசுமை விருத்தாசலம் அமைப்பின் சார்பில், வெள்ளெருக்கு விநாயகர் வழங்கப் பட்டது.விருத்தாசலம் வள்ளலார் குடிலில், பசுமை விருத்தாசலம் அமைப்பின் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் குடில் நிர்வாகி இளையராஜா, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பேசினார். பின்னர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மண்பிள்ளையார், வெள்ளெருக்கு பிள்ளையார்களை சிறுவர்களுக்கு வழங்கினார்.