கடலுார்: திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில், 10 நாள் உற்சவம் துவங்கியது. கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மலையில், கல்விக் கடவுளாக வழிபடும் ஹயக்கிரீவர் கோவில் உள்ளது.
இங்கு, 10 நாள் ஹயக்கிரீவர் உற்சவம், நேற்று முன்தினம், துவங்கியது. அன்று காலை மூலவர் ஹயக்கிரீவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் மாலை சேவை சாற்றுமுறை, தீபாராதனை நடக்கிறது. 10ம் நாள் உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது. ஹயக்கிரீவர் அவதார தினமான திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு சிறப்பு சேவை சாற்று முறை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.