பதிவு செய்த நாள்
04
செப்
2019
01:09
உடுமலை:இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நேற்று 3ம் தேதி நடந்தது.
உடுமலை பகுதிகளில், இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 400க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகி ன்றன. இந்து மக்கள் கட்சி சார்பில், குடிமங்கலம் ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 28 விநாயகர் சிலைகள், விசர்ஜன ஊர்வலம் நேற்று பெதப்பம்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார்.இந்து முன்னணி சார்பில், உடுமலை மேற்கு ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 19 சிலைகள் விசர்ஜன ஊர்வலம், எரிசனம்பட்டியில் நேற்று நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலைகள் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.