பதிவு செய்த நாள்
04
செப்
2019
01:09
பரமக்குடி:பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 26ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
இந்து முன்னணி சார்பில் பரமக்குடியில் விநாயகர் பிரதிஷ்டை நேற்று முன்தினம் (செப்., 1ல்) செய்யப்பட்டது.
தொடர்ந்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல் பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் அருகில் உள்ள பகுதிமுழுவதும் 56 இடங்களில் விநாயகர் வழிபாடு நடந்தது.அப்போது 3 அடி முதல்15 அடி உயர நர்த்தன விநாயகர், சிவன், முருகன் உடனும், நந்தி, சிம்மம், மூஞ்சூரு, சிம்மாசனத்தில் அமர்ந்து என பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்தார்.
அப்போது உறியடி, கோலம், விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. அன்னதானம் வழங்கப் பட்டது. தொடர்ந்து நேற்று 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன. இந்து முன்னணிநகர் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள்கங்காதரன், ரத்தினசபாபதி, மாவட்ட பொருளாளர் ஆதித்தன் முன்னிலை வகித்தனர்.
இந்துமுன்னணி பேச்சாளர் கரூர் திருநாவுக்கரசு ஊர்வலத்தின்முக்கியத்துவம் குறித்து பேசினார்.மேள, தாளம் முழங்க துவங்கிய ஊர்வலம், சந்தை, சின்னக்கடை, காந்தி சிலை, ஐந்துமனை, ஆற்றுப்பாலம்,பஜார் வழியாக பெருமாள் கோயில் வைகை ஆற்று படித்துறை யை இரவு 7:45 மணிக்கு அடைந்தது. அங்கு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய குழியில் தண்ணீர்நிரப்பி அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. விழாவில் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - வி.எச்.பி., பஜ்ரங்தள், இந்துமுன்னணி நிர்வாகிகள்பலரும் கலந்து கொண்டனர்.
டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. நகர் பொதுச் செயலாளர் குமரன் நன்றி கூறினார்.