Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாயல்குடி வேளாங்கண்ணி மாதா ... முதுகுளத்துார் விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதியில் கும்மி பாட்டுடன் விநாயகர் சிலை ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2019
02:09

கமுதி:கமுதி சத்ரிய நாடார் உறவின்முறை பள்ளி நிர்வாக குழு சார்பில்  ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் பஜார்  பகுதிகளில் வைக்கப்பட்டி ருந்த விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி  மாணவிகளின் நடனம், கும்மி பாட்டு நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

சத்ரிய நாடார் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி  நிர்வாகிகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கமுதி செட்டி  ஊரணி கரையில் பொது மக்களின் பார்வைக்கு வைத்தனர்.

பின் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாணவிகளின் கும்மி  நடன நிகழ்ச்சிக்கு பின், சிலைகள் செட்டி ஊரணியில் கரைக்கப்பட்டன. இதே  போல் கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகருக்கு 32 வகையான சிறப்பு  அபிஷேகங்கள், தீபாராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அபிராமம் நகர் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் வழியாக அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி தேரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு நவசக்தி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

வழி நெடுகிலும் பக்தர்கள் பூஜை பொருட்களுடன் அணி வகுத்து நின்று,  சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.  இதே போல் ராமசாமிபட்டியில் கிராம மக்கள் சார்பில் 6 அடி உயர விநாயகர்  சிலை கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பின்  கமுதி ரோட்டில் உள்ள ஊரணியில் கரைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar