முதுகுளத்துார்:செப்.,1ல் விநாயகருக்கு முதல் கால பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. நேற்று 4ம் தேதி காலை 7:00 மணிக்கு கிராமத்தின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
விநாயகருக்கு பால் அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இரவு தெம்மாங்கு கச்சேரி நடைபெற்றது. நேற்று 4ம் தேதி காலை 9:00 மணிக்கு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.