அலங்காநல்லுார்: அழகர்மலையிலுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஆவணி சஷ்டி விழா நடந்தது.
சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. அங்குள்ள மூலவர், வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் விசஷே பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அலங்காநல்லுார் ஐயப்பன் கோயில் உட்பிரகாரத்திலுள்ள பாலமுருகன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.