பதிவு செய்த நாள்
06
செப்
2019
11:09
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மீனுார் மலையில், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், 2, 3 மற்றும், 5ம் தேதியன்று சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், மூலவர் பெருமாள் மீது சூரிய ஒளி விழும். இந்தாண்டும் கடந்த, 2, 3ல், மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை பார்க்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால், மேகமூட்டம் மற்றும் மழையால் மூலவர் மீது சூரிய ஒளி விழவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணி முதல், 5:30 மணி வரை மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள், கோவிந்தா என முழங்கியபடி கண்டுகளித்தனர். சிறிது நேரத்தில் மேகமூட்டம் சூரியனை மறைத்தது. பின்னர் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.