சிவகாசி, அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2019 01:09
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
நேற்று 6 ல்,மாலையில் நடந்த இதில் பாலையம்பட்டி, நெசவாளர் காலனி, மணிநகரம், பெரிய புளியம்பட்டி, காந்தி நகர், வெள்ளக்கோட்டை உட்பட பகுதிகளிலிருந்து 10 க்கு மேற்பட்ட சிலைகள் பங்கேற்றது. புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கி பெரிய கண்மாய் வந்து சிலைகள் கரைக்கப்பட்டது.எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் 8 டி.எஸ்.பி., க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், 850 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகாசி: சிவகாசியில் சிவன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் விநாயகர் சதுர்த்தியன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் விநாய கருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று 6 ல், பல்வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 42 சிலைகள் மாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. ஜக்கம்மாள் கோயில் அருகே விஜர்சன மண்டபத்தில் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.