பதிவு செய்த நாள்
07
செப்
2019
01:09
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, ஏற்காட்டில், 55 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டை யம்பள்ளி, தகரப்புதூர் ஆகிய பகுதிகளில், 45 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் கரைப்பு ஊர்வலம், நேற்று 6ம் தேதி நடந்தது.
தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில், மதியம், 1:30 மணிக்கு, மேள, தாளத்துடன், ஊர்வலம் தொடங்கியது. தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, அங்கு, இந்து முன்னணி சார்பில், சேலம் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமையில், பொதுக்கூட்டம் நடந்தது. பின், மாலை, 3:00 மணிக்கு தொடங்கிய ஊர்வலம், கடைவீதி, நடுவீதி, போலீஸ் ஸ்டேஷன், துறையூர் சாலை வழியாக, செந்தாரப்பட்டி அருகேவுள்ள, இரட்டை குட்டை கல்குவாரிக்கு சென்றடைந்தது.
அங்கு, சிறப்பு பூஜை செய்து, விநாயகர் சிலைகள், கல்குவாரியில் கரைக்கப்பட்டன. ஊர்வல த்தையொட்டி, சேலம் டி.ஐ.ஜி., பிரதீப்குமார் மேற்பார்வையில், 400க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், ஏற்காட்டில், ஜெரினாக்காடு, லாங்கில் பேட்டை, கரடியூர் உள்ளிட்ட கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த, 10 சிலைகள், படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட்டன.