பதிவு செய்த நாள்
07
செப்
2019
01:09
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, நாவலூர் ஊராட்சி, தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள், 60. இவரது தோட்டத்தில், மீனாட்சி அம்மன் அறக்கட்டளை சார்பில், 1,500 சதுரடி பரப்பளவில், புதிதாக, ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது.
அங்கு, 5 அடி உயரத்தில், ஷீரடி சாய்பாபா, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மும்மூர்த்திகளின் சொரூபமாகிய, ஸ்ரீதத்தாத்ரேயர் சிலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இன்று 7ம் தேதி மாலை, 5:00 முதல், இரவு, 8:30 மணி வரை, கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை 8ம் தேதி காலை, 5:00 மணி க்கு, இரண்டாம் கால பூஜை, 8:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், அன்ன தானம் வழங்கப்படும். இதில், திரைப்பட இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த்தேவா, நடிகர் ராதா ரவி, நடிகை நளினி, சினிமா தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம், சினிமா தயாரி ப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் பங்கேற்பர். இத்தகவலை, மீனாட்சி அம்மன் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.