பதிவு செய்த நாள்
07
செப்
2019
03:09
ஆத்தூர்: பச்சியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், பசு மாட்டை, தீ மிதிக்க செய்தனர். ஆத்தூர், கோட்டை, சம்போடை வனத்தில், பச்சியம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, கடந்த, 30ல், 30ம் ஆண்டு அக்னி திருவிழாவையொட்டி, காப்பு கட்டும் விழா தொடங்கியது. நேற்று முன்தினம், பச்சியம்மன், சித்தநாதீஸ்வரர் சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, தீ மிதி திருவிழா நடந்தது. வசிஷ்ட நதியிலிருந்து, அம்மனை அலங்கரித்து எடுத்துவரும்போது, ஏழு சிறுமியர், தீப விளக்குடன் வரவேற்றனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பசு மாடு, அக்னி சட்டி, பூங்கரகத்தை தலையில் சுமந்து பூசாரிகள், குழந்தைகளுடன் பெண்கள் என, 30க்கும் மேற்பட்டோர், தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.