பதிவு செய்த நாள்
09
செப்
2019
01:09
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் லட்சுமி நரசிம்மநகர் விரிவாக்கம் -2ல், ஷீரடி சாய்நாதர் மகராஜ் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று (8ம் தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது.இதை முன் னிட்டு, 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. நேற்று (8ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. குருஜி பிரம்மரிஷி மோகன்ஜி, சிறப்பு விருந்தினராக யாக பூஜைகளில் பங் கேற்றார்.தொடர்ந்து, கலசப்புறப்பாடு நடந்தது. காலை, 9:50 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதையடுத்து, 10:30 மணிக்கு, மூலவர் ஷீரடி சாய்நாதருக்கு, குருஜி மோகன்ஜி, மஹா கும் பாபிஷேகம் நடத்தினார். பின், ஷீரடி சாய்நாதர், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி நிர்வாகிகள் வெங்கடேஷ், சீனிவாஸ், முரளி, ஜெயராமன், பாஸ்கரன், பாலாஜி, வாமனன் மோகன் ராஜ் ஆகியோர் செய்தனர்.