பதிவு செய்த நாள்
09
செப்
2019
01:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத் தின் பல கோவில்களில், கும்பாபிஷேக விழா, நேற்று (செப்., 8ல்) விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம், நெமந்தகார தெருவில் அமைந்துள்ள பழநி ஆண்டவர் கோவிலில், நேற்று (செப்., 8ல்) கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று (செப்., 8ல்) காலை, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டது. 10:00 மணிக்கு, மூலவர் விமான கலசத்திற்கு, சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி னார்.தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றது.
கங்கையம்மன்இடைக்கழிநாடு பேரூராட்சி, கப்பிவாக்கம் பகுதியில், பழமையான கங்கை யம்மன் கோவில் உள்ளது.இங்கு, கங்கையம்மன், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகிய சுவாமிகளுடனும், அலங்கார மண்டபத்துடனும், கிராம மக்கள், புதிய கோவில் அமைத்தனர்.இதையடுத்து, நேற்று (செப்., 8ல்) காலை, 9:45 மணிக்கு, விமானம், சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வரசித்தி விநாயகர்ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, சோமங்கலம் கிராமம் மேட்டூரில், 50 ஆண்டுகள் பழமையான, வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து இருந்த இக்கோவிலை, கிராம மக்கள் புதுப்பித்தனர்.நேற்று (செப்., 8ல்) காலை, கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி, சுவாமிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
வைகுண்டநாத பெருமாள்வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் கிராமத்தில், வைகுண்ட நாதப்பெருமாள் கோவிலில், நேற்று (செப்., 8ல்) காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.காலை, 10:00 மணிக்கு, அனைத்து மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொட்டாலத்தம்மன்உத்திரமேரூர் ஒன்றியம்,அரும்புலியூரில் உள்ள கொட்டாலத்தம்மன் கோவிலை, கிராம மக்கள் புதிதாக கட்டி முடித்தனர்.
இதையடுத்து, நேற்று (செப்., 8ல்) காலை, யாகசாலை ஆரம்பம், மகா சங்கல்பம் மற்றும் குடம் புறப்பாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மஹா கும்பாபி ஷேகம் நடந்தது.
அதேபோல், உத்திரமேரூர் ஒன்றியம், சட்டச்சிவாக்கம் கிராமத்தில் உள்ள, கண்ணபிரான் பஜனை கோவில், அலர்மேல்மங்கை ஆண்டாள் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்கும் பணி, சமீபத்தில் முடிந்தது.இதையடுத்து, நேற்று (செப்., 8ல்) மஹா கும்பாபி ஷேகம் நடந்தது.