பதிவு செய்த நாள்
09
செப்
2019
01:09
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக, நேற்று (செப்., 8ல்),, சென்றது.
செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இங்கு, தினமும், பூஜைகள் செய்யப்பட்டது.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பு சார்பில், சிலைகள் வைத்து வழிபட்டனர். நேற்று (செப்., 8ல்), விநாயகர் சிலைகளை, கடலில் எடுத்து கரைக்க முடிவு செய்தனர்.இதைதொடர்ந்து, பழைய பஸ் நிலையத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக, மாமல்லபுரம் கடற்கரைக்கு, 123 சிலைகள், போலீஸ் பாதுகாப்போடு சென்றது. இதேபோன்று, வண்டலுார் போலீஸ் துணை கோட்டத்தில், 56 சிலைகள், கடலுக்கு எடுத்துச்சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.