பதிவு செய்த நாள்
09
செப்
2019
02:09
புதுச்சேரி: செட்டிப்பட்டு வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 11ம் தேதி நடக்கிறது.மண்ணாடிப்பட்டு கொம்யூன், செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டது. அதனையொட்டி நாளை மறுநாள் 11ம் தேதி கும்பாபிஷேகம்நடக்கிறது.
இதற்கான விழா இன்று 9ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, யஜமான சங்கல்பம், விஷ்வசேன ஆராதனம், ஆசார்ய வர்ணம், பாலிகை ஸ்தாபனம், வாஸ்து ஹோமத்துடன் துவங்குகிறது.
நாளை 10ம் தேதி, காலை 8:00 மணிக்கு ரக்க்ஷாபந்தனம், த்வார, தோரண, கும்ப, பிம்ப, மண்டல பூஜைகளும், காலை 11:00 மணிக்கு கரிகோல ஊர்வலமும், மதியம் 2:45 மணிக்கு மகா கலச விசேஷ திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு தத்வ ஹோமமும், இரவு 8:00 மணிக்கு சயனாதிவாசம் நடக்கிறது. நாளை (செப்., 10ல்) மறுநாள் 11ம் தேதி காலை 5:45 மணிக்கு, கோ பூஜை, ஹோமம் தொடங்குகிறது. காலை 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம், நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம வாசிகள் செய்து வரு கின்றனர்.