நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
இங்கு நேற்று முன்தினம் (செப்., 7ல்) காலை சிறப்பு அபிஷேகம், சக்திகரகம் வீதி உலா நடந்தது. மதியம் சாகை வார்த்தல் விழா நடந்தது.இரவு காத்தவராயனுக்கு கும்பம் படையல், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.