கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை பாவ நாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில், பாவ நாராயணர் கோவில் உள்ளது. இதில், சுவாமி திருக்கல்யாண வைபவம் முன்னிட்டு யாக பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், இளைஞர்கள், இளம்பெண்களின் திருமணம் தடை நீங்க நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.