பதிவு செய்த நாள்
09
செப்
2019
02:09
குளித்தலை: குளித்தலை அருகே, அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா விமரி சையாக நடந்தது. குளித்தலை அடுத்த, ஏ.நடுப்பட்டியில், கன்னிமார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 7ல்), கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்தகுடம் எடுத்து கொண்டு கோவி லுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, யாக சாலையில் சிவாச்சாரியார்கள் மூன்று கால பூஜை செய்து, நேற்று (செப்., 7ல்) காலை, 10:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.