பதிவு செய்த நாள்
10
செப்
2019
01:09
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாலக்காட்டில் இருநாள் சங்கீத உற்சவம், வரும், 14ம் தேதி துவங்குகிறது.
பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், அன்று காலை, 11:30 மணிக்கு, எம்.பி. வீரேந்திரகுமார், விழாவை துவக்கி வைக்கிறார். கேரள கலாமண்டல பதிவாளர் ஜெயபிரகாஷ், கலாசாரத்துறை அமைச்சர் பாலன், சங்கீத நாடக அகாடமி செயலாளர் ராதாகிருஷ்ணன் நாயர் ஆகியோர் பங்கேற்கின்றனர். சங்கீத கலைஞர்கள் ஜெயன், கோதண்டராம பாகவதர் ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர். 15ம் தேதி காலை 11:30 மணிக்கு, செம்பை வித்யா பீடத்தின், 34வது ஆண்டு மாநாட்டை, ஒற்றப்பாலம் தொகுதி எம்.எல்.ஏ., உண்ணி துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், ஆலத்துார் எம்.எல்.ஏ., பிரசேனன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இரு நாட்கள், சங்கீத ஆராதனை நடக்கிறது. செம்பை வித்யாபீட தலைவர் செம்பை ஸ்ரீனிவாசன், துணை தலைவர் சுரேஷ், செயலாளர் முருகன் ஆகியோர், விழா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.