பதிவு செய்த நாள்
10
செப்
2019
01:09
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உற்சவம், நாளை, துவங்குகிறது. நித்திய பூஜைகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தவறுதல்களினால் உண்டாகும் கெடுதல்களிலிருந்து, நிவர்த்தி கிடைக்க, பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், யாகசாலை அமைத்து, தினமும், ஹோமம், காலை, 10:00 மணிக்கும், இரவு, 7:00 மணிக்கும், நடத்தப்படுகிறது.தினமும், பெருமாள் மாடவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. வரும், 19ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஹோமம் துவங்கி, மஹா பூர்ணாஹூதி, இரவு, 10:00 மணிக்கு நடைபெறும்.அன்று, நள்ளிரவு, 12:00 மணிக்கு, பெருமாள் திருமஞ்சனத்துடன், பவித்ர உற்சவம் நிறைவடைகிறது.