குளித்தலை காமாட்சியம்மன் கோவிலில் 8ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2019 03:09
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதியில் உள்ள அன்னை காமாட்சியம் மன் கோவிலில், எட்டாம் ஆண்டாக, 756 திருவிளக்குகளை வைத்து பூஜை நடந்தது.
உலக அமைதி, பெண்களின் மாங்கல்ய தோஷம் நீங்க வரலட்சுமி பூஜை, மழைவளம் பெருக, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் போன்ற வேண்டுதல்களை வலியுறுத்தி, சுக்கினியான் கொம்பு பங்காளிகளின் விழாக் குழுவினர்களால் இந்த பூஜை நடத்தப்பட்டது. நான்கு காலமாக நடந்த இப்பூஜையில், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.