அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில், அகில பாரத அனுமன் சேனா சார்பில், சீதா திரு கல்யாணம் நடந்தது. ராமலிங்கா மில்ஸ் சேர்மன் தினகரன் தலைமை வகித்தார். ராமன், சீதா விற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பக்தர்கள் திருமண சீதன பொருட்கள் மற்றும் சீர் வரிசைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதன் பின் சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகில பாரத அனுமன் சேனா மாநில துணைத் தலைவர் சங்கர் செய்திருந்தார்.