பதிவு செய்த நாள்
04
ஏப்
2012
10:04
பழநி : பழநி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. பங்குனி உத்தரத்திருவிழா மார்ச் 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பக்தர்கள் காவடி, அலகு குத்தி தரிசனம் செய்து வருகின்றனர். திருஆவினன்குடியில் முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி காமதேனுவாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனத்திலும் சன்னதி வீதி, கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா நடைபெறும். தேரோட்டம்: நாளை மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பாதுகாப்பு பணி: விழாவிற்கான பாதுகாப்பு பணியில், 15 டி.எஸ்.பி.,க்கள், 46 இன்பெக்டர்கள், 147 எஸ்.ஐ.,க்கள், 1300 சிறப்பு காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் மலைக்கோயில், திருஆவினன்குடி, கிரிவிதிகளிலும், அடிவாரப்பகுதிகள், மற்றும் இடும்பன் குளம், பஸ் ஸ்டாண்ட், பகுதிகளில் பணியில் ஈடுபடுவர்.