பதிவு செய்த நாள்
12
செப்
2019
03:09
பொள்ளாச்சி:கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது ஓணம். கேரளாவில் மட்டுமன்றி, கேரளாவை ஒட்டிய தமிழக நகரங்களிலும் நேற்று 11ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நேற்று 11ம் தேதி அதிகாலையில் புத்தாடை அணிந்து, மகாபலி மன்னனை வரவேற்க, வீட்டு வாசல்களில் வண்ண மலர்களில், அத்தப்பூ கோலமிட்ட வணங்கி வழிபட்டனர். தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றும் வழிபட்டனர். நண்பர்கள், உறவினர்களை அழைத்து, பலவகை பதார்த்தங்கள், உணவு பரிமாறி மகிழ்ந்தனர். பொள்ளாச் சியில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் மகாலிங்கபுரம், வடக்கிபாளையம், தமிழ்மணி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர்.
* தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, மளுக்கப்பாறை, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை நேற்று 11ம் தேதி கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்தும், கோவில்களில் வழிபாடு நடத்தினர். அதிகாலை நேரத்தில் வீடுகளில் பூக்கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தி மன்னரை வரவேற்றனர்.வால்பாறை பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் சார்பில் திருவோணப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
திரிநேந்திரபரி சன்னதியில் நடந்த விழாவுக்கு, ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். முத்தையா வரவேற்றார். விழாவில், கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது.