பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
அவிநாசி:அவிநாசி, காமராஜ் நகர், ஸ்ரீகுழந்தை விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபி ஷேக விழா நடந்தது.கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜைகள், 10ம் தேதி விநாயகர் வழி பாட்டுடன் துவங்கியது.
கணபதி ஹோமத்தை தொடர்ந்து, அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது.மாலையில், முதல்கால வேள்வி பூஜை யும், நேற்று 11ம் தேதி காலை, இரண்டாம்கால வேள்வி பூஜையும் நடந்தன. உபசார வழிபாடு களை தொடர்ந்து, காலை, 6:00 மணி முதல், 7:25 மணிக்குள், விமானம் மற்றும் குழந்தை விநாயகர், பாலமுருகன் கும்பாபிஷேகம் நடந்தது.
தச தரிசனம், தச தானத்தை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் கோவில் பிரகாஷ்சாமி தலைமையிலான குழு, கும்பாபிஷேக சர்வசாதகம் மேற்கொண்டது. இன்று 12ம் தேதி முதல், மண்டல பூஜை துவங்க உள்ளது.