வெள்ளகோவிலில் வீரக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக, 9ம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2019 04:09
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் வீரக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேக, 9ம் ஆண்டு விழா நடந்தது.செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு ஹோம பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.
அதன்பின், வீரக்குமார சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மஹா தீபராதனை நடந்தது.விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சுவாமி திருவீதியுலா காட்சி நடந்தது. முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டத. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ரத்தினாம்பாள், கோவில் குலத்தவர்கள் செய்திருந்தனர்.