பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
திருப்பூர்:திருப்பூர் சுற்றுப் பகுதியில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கேரள மாநில முக்கிய பண்டிகையான ஓணம், மலையாள மக்களால் கொண்டாடப்படும். திருப்பூரில், ஆயிரக்கணக்கான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தம் உள் ளிட்ட பல்வேறு காரணங்களால், கேரளா செல்ல முடிவதில்லை. இதனால், திருப்பூரிலே யே ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இதனால், திருப்பூரில் பல இடங்களில் ஓணம் களை கட்டியது. கேரள மக்கள் தங்கள் வீடுகளில், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்து, வாசலில் விளக்கேற்றி வழிபட்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர் களுக்கும் ஓணம் விருந்தளித்து மகிழ்ந்தனர். படைத்தும் வழிபட்டனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவில், பனியன் நிறுவனங்கள், பிரின்டிங் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில், பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருந்தது. ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில்களில், ஓணம் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.