பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மதியம்பட்டி மாரியம்மன், அம்பலாயி அம்மன் கோவிலில் நாளை 13ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று 13ம் தேதி காலை, மங்களஇசை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக சக்தி ஹோமம், கோமாதா பூஜை, தமிழ்திருமுறை ஓதுதல், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி உள்ளிட்டவை நடந்தன.
இன்று 12ம் தேதி காலை, 7:00 முதல், இரவு, 8:00 மணி வரை நூல் வேத பாராயணம், இரண்டாம் கால பூஜை, சிலைகள் கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நாளை 13ம் தேதி காலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 6:30 மணி முதல், 8:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும்.