பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
மோகனூர்: வெள்ளாளப்பட்டியில் விநாயகர், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் கிராமம் வெள்ளாளபட்டியில், விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில், மிகுந்த பொருட்செலவில், திருப்பணி துவங்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், நேற்று 11ம் தேதி கும்பாபிஷேக விழா, விநாயகர் வழிபாடு, கிராம சாந்தியுடன் துவங்கியது.
தொடர்ந்து, சங்கல்பம், மஹா கணபதி யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், வாஸ்து சாந்தி, பூமாதேவி பூஜை, முதல் கால யாக வேள்வி நடந்தது. நேற்று 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு; காலை, 9:00 மணிக்கு, விநாயகர் கோவில், பகவதியம்மன் கோபுர கலசத்துக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.