சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது.கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 1ம் தேதி ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதி காத்தவராயன் ஆரியமாலா திருமணம், மதியம் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 11ம் தேதி காலை மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.விழா ஏற்பாடுகளை பழையனுார் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.