பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
விழுப்புரம்: திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில், தேர் கூடாரம் அமைக்கும் திருப் பணிகள் துவங்கியது.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோவில் 42 அடி உயர திருத்தேருக்கு, கூடாரம் அமைப்பதற்கான திருப்பணிகள் துவக்க விழா நேற்று 11ம் தேதி நடந்தது.
விழாவிற்கு, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் குபேரன் தலைமை தாங்கினார். சரஸ் வதி குபேரன், டவுன் டி.எஸ்.பி., திருமால் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சுப்பிரமணியன், தேருக்கு கூடாரம் அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன், கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் குணசேகரன், வள்ளி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன், ஆனந்தா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமணி, ஜி.வி., அக்ரோ புட்ஸ் உரிமையாளர் வெங்கடேசன், திலகவள்ளி ஜூவல்லரி உரிமையாளர் முத்துகிருஷ்ணன், தி சென்னை சில்க்ஸ் மேலாளர் வீரமணி, வெங்கடேஸ்வரா ஜூவல்லரி உரிமையாளர் வெங்கடேசன், சென்னையை சேர்ந்த வைத்தியலிங்கம், வி.வி.சி., மார்டன் ரைஸ்மில் உரிமையாளர் வேல்முருகன், கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் சரவணன், அர்ச்சகர்கள் அருணாசல சிவாச்சாரியார், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.