போபால்: இந்தியாவின் பல கிராமங்களில் மழைப்பொழிவு இல்லாத நேரங்களில் பல்வேறு சடங்குகளும் பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைவேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைபெய்துவிட்டது. இருப்பினும் மழை இன்னும் நிற்கவில்லை. இதனால் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்தால் மழை நிற்கும் என்ற முடிவுக்கு போபால் மக்கள் வந்தனர். இதற்காக திருமணம் செய்த தவளைகளை தேடி பிடிக்க முடியாது என்பதால் அவற்றுக்கு பதில் இரண்டு தவளை பொம்மைகளை வைத்து விவாகரத்து சடங்கை முடித்தனர்.