வடமதுரை: வடமதுரை மேற்கு ரத வீதி சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. செப்.7-ல் பக்தர்கள் காப்பு விரதத்தை துவங்கினர். செப்.10ல் வாஸ்து பூஜையுடன் துவங்கிய விழாவில், கள்ளியடி பிரம்மா மடத்தில் இருந்து முளைப்பாரி, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கனி மூலிகை பூஜை, திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சேனன்கோட்டை நாராயணன் அய்யங்கார் வருடாபிஷேகத்தை நடத்தி வைத்தார். உற்ஸவர் புறப்பாடாகி ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை சித்தி முத்தி விநாயகர் சேவை அறக்கட்டளை தலைவர் கோதண்டபாணி, செயலாளர் குமார், பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் செய்திருந்தனர்.