தேவாரம்:கோம்பை ஜக்காலம்மன், சிக்கச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜமின்தார் சீனிவாச ராயர் தலைமையில் நடந்தது.ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிக்கச் சியம்மன் கோயில் வளாகத்தில் நாகர், கருப்பசாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நிர்வாக குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.