ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் இருந்து ஐயப்ப சேவா சமாஜம், இந்து முன்னணி சார்பில் ஐயப்பன் ரத யாத்திரை நேற்று 12ம் தேதி தொடங்கியது.
ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்கவும், நீர் நிலைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் அய்யப்ப ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஐயப்ப சேவா சமாஜ நிர்வாகிகள் துரைச்சாமி, திருவாசகம், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் சரவணன், நகர் செயலாளர் நம்புராஜன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ரத யாத்திரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 20 நாட்களுக்கு வலம் வரவுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.