பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழா நேற்று 12ம் தேதி நடந்தது.இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி துவங்கியது.
இதையொட்டி அன்று மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு, இரண் டாம் கால யாகசாலை பூஜையும், 108 திரவிய ஹோமமும் நடந்தது.
மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மந்திர உபசாரமும் நடந்தது. தொடர்ந்து, நேற்று 12ம் தேதி காலை 8:30 மணிக்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில், திரவுபதியம்மன் கோபுர விமான கும்பாபிஷேகமும், திரவுபதியம்மன் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக மும் நடந்தது.