பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
சென்னை:கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்ல, அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்ல, நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது.இத்திட்டத்தில், 50 கன்னியாஸ்திரிகள் உட்பட, 600 கிறிஸ்தவர்கள், புனித பயணம் மேற்கொள்ள, அரசு ஆணை வெளியிட்டுஉள்ளது. அதன்படி, செப்., முதல், 2020 மார்ச் வரை, பயணம் மேற்கொள்ளப்படும். பயண காலம், 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தில் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் இணைத்து, கிறிஸ்தவர்களின், ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி விண்ணப்பம் 2019 -- 20 என எழுதி, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால், பாரம்பரிய கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - -2852 0033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.