பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
காஞ்சிபுரம்:பெங்களூரு, உத்திராதிமட பீடாதிபதி சத்யாத்ம தீர்த்த சுவாமிகள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, 18.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கல் பதித்த தங்கப்பதக்க சங்கிலியை வழங்கினார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, உத்திராதி மட பீடாதிபதி சத்யாத்ம தீர்த்த சுவாமிகள், காஞ்சி புரம், உத்திராதி மடத்தில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ளார்.
அத்தி வரதர் வைபவத்தின்போது, தினமும் மாலையில், சுவாமி தரிசனம் செய்து வந்தார். இந்நிலையில் அவர், சாதுர்மாஸ்ய விரதம் நினைவாக, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு, 18.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 109 கிராம் எடை கொண்ட, கல் பதித்த தங்கப்பதக்க சங்கிலியை, நேற்று முன்தினம் 11ம் தேதி வழங்கினார்.