புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை திதி
தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் மகாளய பட்ச காலம். இந்த காலத்தில் நம்
முன்னோர்கள் பூலோகத்திற்கு நம்மைக் காண வருகின்றனர். அவர்களை வரவேற்பது நம்
கடமை. இந்த நாட்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கோடிக்கரை, வேதாரண்யம்,
கன்னியாகுமரி உள்ளிட்ட தீர்த்தக்கரைகளில் முன்னோர்கள் இறந்த திதியன்று
தர்ப்பணம், சிராத்தம் செய்தால் வாழையடி வாழையாக வம்சம் தழைக்கும். முன்வினை
பாவம் தீரும். பிதுர் ஆசியால் செல்வம், மனநிம்மதி கிடைக்கும்.