இளையான்குடி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2019 01:09
இளையான்குடி:இளையான்குடி அருகே மருதங்கநல்லுார் சின்னாயி அம்மன், சுப்பிரமணிய சுவாமி ஆலயகும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், யாகசாலையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. நேற்று 15ம் தேதி காலை 11:00மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதை தொடர்ந்து மகாஅபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.