பதிவு செய்த நாள்
16
செப்
2019
01:09
ஆர்.கே.பேட்டை:புராதன கோவில் குளத்தின் சீரமைப்பு பணிகள், தற்போது, துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்தான வேணுகோபாலபுரம் கிராமத்தில், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில், இரண்டு புராதன கோவில் குளங்கள் உள்ளன.இந்த குளங்கள் உறுதிப் படுத்தும் விதமாக, கிழக்கில் குளத்தின் நீர்வரத்து கால்வாய் உள்ளது. குளத்தின் கரையின் ஊடாக, பாறைகளை கொண்டு, வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், குளத்தின் கரையில் மண்ணரிப்பு ஏற்படுத்தாதபடி, குளத்தின் மையப் பகுதியில் விழும்படி யாக, வடிவமைக்கப்பட்டு உள்ளது.செங்கல் மற்றும் பாசறைகளை கொண்டு, நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த வரத்துகால்வாய், மர்ம நபர்களால், உடைத்து சேதமாக்கப்பட்டது.
இந்நிலையில், குளத்தை துார் வாரும் பணிகள், தற்போது, துரித வேகத்தில் நடந்து வருகின் றன. இந்த பணியின் போது, புராதன நீர்வரத்து கால்வாயையும், நான்கு கரைகளில் உள்ள படித்துறைகளையும் புனரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.