நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊர் பறக்கை. மதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இந்தக் கோயிலின் கருடாழ்வார் சிலையை சிற்பிகள் வடிவமைத்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சிற்பக் கூடத்திலிருந்து கருடாழ்வார் பறந்து வந்து இந்தப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துகொண்டார். கருடாழ்வார் பறந்து வந்ததால், இந்த ஊர் பறக்கை என்றானது. இங்குள்ள கருடனை வழிபட நாக தோஷங்கள் அகலும். ஆண்டுதோறும் இங்கே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அன்று தெப்பத்தில் பெண்கள் தீபமேற்றி வைத்து மனமுருகி வழிபடுவார்கள். இதனால் குடும்பத்தில் சுப காரியங்கள் கூடிவரும்; செல்வ வளம் உயரும் என்பது ஐதீகம்.