பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
ஓமலூர்: காடையாம்பட்டி, காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில், புரட்டாசி திருவிழா கோலா கலமாக கொண்டாடப்படும். இன்று, புரட்டாசி தொடங்குவதால், பெருமாளுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம், தேரோட்டம் ஆகியவை நடக்கும். அதற்காக, கோவில் உட்பிரகார த்தில், மேற் கூரை, சுவாமியை தரிசிக்க, பக்தர்கள் வரிசையாக செல்ல மூங்கில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதையடுத்து, நேற்று 17ல் காலை, இந்து சமய உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், உண்டி யல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. அதில், நான்கு லட்சத்து, 67 ஆயிரத்து, 263 ரூபாய் இருந்தது. செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் உடனிருந்தார்.