பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
ஓசூர்: பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு, கட்சியினர் இனிப்புகளை வழங்கினர்.
ஓசூர் நகர, பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 69வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓசூர், எம்.ஜி.,ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், கோட்ட பொறுப்பாளர் பால கிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் தலைமையில், நேற்று 17ல், காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜன், செயலாளர் ராஜி, நகர பொதுச்செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேன்கனிக்கோட்டையில், மாவட்ட செயலாளர் நாராயணன், நகர தலைவர் பார்த்திபன் ஆகி யோர் தலைமையில், கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரின் முக்கிய இடங்களில் பா.ஜ.,வினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கெலமங்கலம் சின்ன பழனிமுருகன் கோவில் மற்றும் சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.