கோயில் கருவறையில் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2019 04:09
அனைத்து கோயில்களிலும் அனைத்து சன்னிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. கருவறையில் இறைவனுக்கு கோயில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது, அந்த ஒளியின் மூலம் தெய்வத்தின் திருவுருவம் பக்தருடைய மனதில் பதிந்துவிடுகிறது.
அதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தெய்வத்தின் தொடர்பு உண்டாகி நம்மை வழிநடத்தும். நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியைப் பெருக்கி, நமக்கு ஆனந்த நிலையை அளிக்கும் ஆற்றல் மூலவருக்குச் செய்யும் தீபாராதனைக்கு உண்டு. திருவிளக்குகள் வெளிச்சம் மட்டும் தருவதில்லை; அதன் ஒளிக்கதிர்களின் இறை சாந்நித்தியம், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் உள்ள தீய சக்திகளை விலக்கி இறையருளை வியாபிக்கச் செய்யும். தற்காலத்தில் பரிவார சன்னிதிகளில் மின் விளக்குகளும், மூலவரின் கருவறையில் திருவிளக்குகளும் ஏற்றப்படுகின்றன. வரும் காலத்திலாவது அனைத்து பரிவார சன்னிதிகளிலும் திருவிளக்குகளின் எண்ணிகையை அதிகரிக்கச் செய்து, இயற்கையான வெளிச்சத்தில் தெய்வங்களை தரிசிக்க செய்ய வேண்டும்.